தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ அலுமினிய உற்பத்தியை அதிகரிக்க வலியுறுத்தல்

 அலுமினிய உற்பத்தியை அதிகரிக்க வலியுறுத்தல்

 அலுமினிய உற்பத்தியை அதிகரிக்க வலியுறுத்தல்


UPDATED : டிச 26, 2025 09:01 AM

ADDED : டிச 26, 2025 01:15 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 26, 2025 09:01 AM ADDED : டிச 26, 2025 01:15 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: மின்வாகனத் தயாரிப்பு, கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அலுமினியத்தின் தேவை அதிகரித்து வருவதால், அதிகளவில் உற்பத்தி செய்யவும்; இலக்கை எட்டவும், பொதுத்துறை நிறுவனமான 'நால்கோ'வை மத்திய சுரங்கத்துறை செயலர் பியுஷ் கோய ல் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், நால்கோ நிறுவனத்தின் விரிவாக்கப் பணிகள் குறித்து, ஒடிசா மாநில தலைமைச் செயலரை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். நால்கோ நிறுவனம், அலுமினிய தயாரிப்புக்கான பாக்ஸைட் வெட்டியெடுத்தல், சுத்திகரிப்பு ஆகியவற்றில் ஈடுபடுகிறது.

அலுமினிய தேவை அதிகரிப்பால், ஒடிசாவின் தமஞ்சோடியில் சுரங்கம் மற்றும் சுத்திகரிப்பு வளாகம், அங்குலில் உள்ள உருக்காலை மின் வளாகத்தில் இந்நிறுவனம் விரிவாக்கப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

அலுமினிய உற்பத்தி, விரிவாக்க பணிகளுக்காக 35,000 கோடி ரூபாயை முதலீடு செய்வதாக நால்கோ அறிவிப்பு.
* நிறுவனத்தின் உலோகத்தை உருக்கும் திறனை ஆண்டுக்கு கூடுதலாக 5 லட்சம் டன் அதிகரிக்க இருப்பதாக அறிவிப்பு.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us