தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/கமிஷனுக்கும் குறைந்தபட்ச வரம்பு நிர்ணயிக்க காப்பீட்டு முகவர்கள் கோரிக்கை: செலவை கட்டுப்படுத்த புதிய அணுகுமுறை தேவை

கமிஷனுக்கும் குறைந்தபட்ச வரம்பு நிர்ணயிக்க காப்பீட்டு முகவர்கள் கோரிக்கை: செலவை கட்டுப்படுத்த புதிய அணுகுமுறை தேவை

கமிஷனுக்கும் குறைந்தபட்ச வரம்பு நிர்ணயிக்க காப்பீட்டு முகவர்கள் கோரிக்கை: செலவை கட்டுப்படுத்த புதிய அணுகுமுறை தேவை


UPDATED : அக் 29, 2026 10:33 PM

ADDED : அக் 29, 2026 10:29 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 29, 2026 10:33 PM ADDED : அக் 29, 2026 10:29 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காப்பீட்டு நிறுவனங்களின் நிர்வாக செலவை குறைக்கும் நடவடிக்கைகளால், முகவர்களின் வருவாயும், பாலிசிதாரர்களுக்கு கிடைக்கும் சேவையும் பாதிக்கப்படக்கூடாது என, இந்திய பொதுக் காப்பீட்டு முகவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.

காப்பீட்டு நிறுவனங்களின் நிர்வாக செலவுகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை கொண்டுவர, இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமான ஐ.ஆர்.டி.ஏ.ஐ., மாற்றங்களை பரிசீலித்து வருகிறது. இதையடுத்து, 16 லட்சம் முகவர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறும் கூட்டமைப்பு, பிரதமர் நரேந்திர மோடிக்கு மனு அனுப்பியுள்ளது.

பொதுக் காப்பீட்டு நிறுவனங்களின் நிர்வாக செலவு வரம்பை இரண்டு ஆண்டுகளில் 25 சதவீதமாகவும், ஐந்து ஆண்டுகளில் 20 சதவீதமாகவும் குறைக்கும் திட்டம், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு சவாலாக அமையலாம்.

முகவர்களின் பங்கு



இணையத்தில் பாலிசி வாங்கும் வசதி அதிகரித்தாலும், மருத்துவ அவசரநிலை மற்றும் வாகன விபத்து போன்ற நேரங்களில் முகவர்களின் உதவி தேவைப்படுகிறது. மருத்துவ ஆவணங்களை சமர்ப்பித்தல், இழப்பீட்டு கோரிக்கையின் நிலையை அறிதல், பாலிசி நிபந்தனைகளை விளக்குதல் உள்ளிட்ட பணிகளில் அவர்கள் உதவுகின்றனர். இந்நிலையில், தனிநபர் முகவர்களுக்கு சராசரியாக 12 முதல் 13 சதவீதம் வரை கமிஷன் கிடைப்பதாக கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது. இதிலிருந்தே பயணம், அலுவலக பராமரிப்பு உள்ளிட்ட செலவுகளையும் முகவர்கள் ஏற்க வேண்டியுள்ளதாக முகவர்கள் சங்கங்கள் தெரிவித்துள்ளது.

கூடுதல் கட்டுப்பாடுகள்



மருத்துவமனைகள் மற்றும் வாகன பழுது நீக்கும் நிலையங்கள் காப்பீட்டு பாலிசிகளை நேரடியாக விற்பனை செய்வதிலும் கட்டுப்பாடுகள் தேவை என வலியுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், வங்கிகள் கடன் தொடர்பான காப்பீடுகளுக்கு முன்னுரிமை அளிக்கவும், பிற பாலிசிகளின் விற்பனையில் கூடுதல் விதிகளை கொண்டுவரவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, புதிய கட்டுப்பாடுகளை இறுதி செய்வதற்கு முன், முகவர்கள் சங்கங்களுடன் மத்திய நிதி அமைச்சகமும், ஐ.ஆர்.டி.ஏ.ஐ., அமைப்பும் ஆலோசனை நடத்த வேண்டும் என கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

செலவு அதிகரிப்பது எங்கே?

மருத்துவமனைகளில்: காப்பீடு உள்ள நோயாளிகளுக்கு கூடுதல் சிகிச்சை கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்.

வாகன பழுது நீக்கும் நிலையங்களில்: காப்பீட்டு இழப்பீடு கோரப்படும் பணிகளுக்கு அதிக கட்டணம் மதிப்பிடப்படுவதாக குற்றச்சாட்டு.

காப்பீட்டு நிறுவனங்களுக்கு: இழப்பீடாக வழங்க வேண்டிய தொகை உயர்வதால் கூடுதல் செலவு ஏற்படுவதாக சங்கத்தின் மதிப்பீடு.

பாலிசிதாரர்களுக்கு: இந்த செலவு உயர்வு பிரீமியம் கட்டணத்தில் அழுத்தத்தை ஏற்படுத்துவதாக கூட்டமைப்பு கருத்து.

முகவர்கள் வைத்துள்ள கோரிக்கைகள்

* அதிகபட்ச கமிஷன் வரம்பில் 75 சதவீதத்தை குறைந்தபட்சமாக வழங்க வேண்டும்.

* ஒவ்வொரு சில்லறை அல்லது வாகன காப்பீட்டு பாலிசிக்கும் குறைந்தபட்சம் 250 ரூபாய் கட்டணம் வழங்க வேண்டும்.

* பீமா சுகம் தளத்தில் பாலிசி சேர்த்தல், புதுப்பித்தல், சேவை வழங்குதல் ஆகியவற்றில் முகவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்.

* தனிநபர் முகவர்களுக்கு பங்களிப்பு அடிப்படையிலான ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீட்டு வசதி ஏற்படுத்த வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us