தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ சர்வதேச வார்ப்பு தொழில் கண்காட்சி கோவையில் துவங்கியது

 சர்வதேச வார்ப்பு தொழில் கண்காட்சி கோவையில் துவங்கியது

 சர்வதேச வார்ப்பு தொழில் கண்காட்சி கோவையில் துவங்கியது


ADDED : செப் 11, 2026 06:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 11, 2026 06:25 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: வார்ப்பட பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் தொடர்பான, மூன்று நாள் 'சர்வதேச பவுண்டரி கண்காட்சி' கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் துவங்கியது.

நிகழ்ச்சியில், குளோபல் பர்ச்சேஸ் அண்டு சப்ளை செயின் நிறுவன துணை தலைவர் பிராக் சர்மா பேசுகையில், “சர்வதேச அளவில் இந்திய வார்ப்பட பொருட்களுக்கு தேவை அதிகரித்து வருகிறது.

வரியில்லா வர்த்தக ஒப்பந்தத்தால், ஐரோப்பிய நாடுகளுக்கு இரும்பு வார்ப்பட பொருட்களை எளிதாக ஏற்றுமதி செய்ய முடியும். சர்வதேச தேவையை கரு த்தில் கொண்டு உற்பத்தியை பெருக்க, திட்டமிட வேண்டும்,” என்றார்.

கண்காட்சியின் தலைவர் ஜெயக்குமார் ராம்தாஸ் கூறுகையில், பவுண்டரி டெவலப்மென்ட் பவுண்டேஷன் நடத்தும் மூன்றாவது கண்காட்சியில், 320 அரங்குகள், 18,000 சதுரமீட்டரில் அமைக்கப்பட்டுள்ளன. குஜராத், மஹாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, மேற்கு வங்க மாநிலங்களை சேர்ந்த பவுண்டரிகள் பங்கேற்றுள்ளன.

ஜெர்மனி, இத்தாலி, சீனா உள்ளிட்ட நாடுகளின் பவுண்டரி இயந்திரங்கள் தயாரிக்கும் நிறுவனங்களும் தயாரிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளன” என்றார்.

கண்காட்சி துவக்க விழாவில், ஜெர்மனியின் பிராங்க்பர்ட்டில் உள்ள வி.டி.எம்.ஏ., மெட்டலர்ஜி அன்ட் தெர்மல் புரசாசசிங் அமைப்புடன், கோவை பவுண்டரி டெவலப்மென்ட் பவுண்டேஷன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.

தற்போது இந்திய சந்தை ரூ.2.72 லட்சம் கோடி 2031ல் கணிப்பு ரூ.4.43 லட்சம் கோடி உற்பத்தி அளவு 1.5 கோடி டன் முக்கிய சந்தை கோவை, 600 ஆலைகள், 15 லட்சம் டன் உற்பத்தி, தேசிய அளவில் 10%, ஆண்டு உற்பத்தி ரூ.25,000 கோடி முக்கிய துறைகளில் வார்ப்படம் வாகனம் ரயில்வே வேளாண்மை

ஆட்கள் பற்றாக்குறையை தவிர்க்க, ஆட்டோமேஷன், பொருட்களை துல்லியமாக தயாரிக்க ஏ.ஐ., தொழில்நுட்பம், வார்ப்படங்களை எளிதாக கையாள இயந்திரங்கள், கருவிகள், கலவை ரசாயன பொருட்கள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us