உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : பிப் 07, 2024 01:35 AM

அ நிறம் | அளவு
சென்னை:ஐ.ஓ.சி., எனப்படும் 'இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்' நிறுவனத்தின் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான செயல் இயக்குனராகவும், மாநில தலைவராகவும் அண்ணாதுரை பொறுப்பேற்று கொண்டார்.
இவர், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான ஒருங்கிணைப்பாளராகவும் இருப்பார்.
இதற்கு முன், இந்த பதவியில் இருந்த வி.சி.அசோகன், சில்லரை விற்பனை பிரிவு தலைவராக, மஹாராஷ்டிரா மாநிலம், மும்பைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தியன் ஆயில் நிறுவனத்தில், சில்லரை விற்பனை, செயல்பாடுகள், விமான போக்குவரத்து ஆகியவற்றில் சிறந்த அனுபவம் உடையவர் அண்ணாதுரை.
சென்னை, கிண்டி இன்ஜினியரிங் கல்லுாரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங், சென்னை பல்கலையில் நிதித்துறையில் எம்.பி.ஏ., ஆகிய பட்டங்களை பெற்றவர்.
