தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/‘கழிவுநீர்’ அல்ல... மீண்டும் பயன்படும் நீர்வளம்!

‘கழிவுநீர்’ அல்ல... மீண்டும் பயன்படும் நீர்வளம்!

‘கழிவுநீர்’ அல்ல... மீண்டும் பயன்படும் நீர்வளம்!


UPDATED : அக் 19, 2026 12:00 AM

ADDED : அக் 18, 2026 04:35 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 19, 2026 12:00 AM ADDED : அக் 18, 2026 04:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

த மிழகத்தில் தண்ணீர்ப் பற்றாக்குறையும், நிலத்தடி நீர் மாசுபாடும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதற்கு தண்ணீர்ப் பற்றாக்குறை மட்டுமின்றி, கிடைக்கும் நீரை முறையாக நிர்வகிக்காததும், கழிவு நீரைச் சரியாகச் சுத்திகரிக்காமல் வெளியேற்றுவதும் காரணமாக உள்ளன என்கிறார், கோவை மேக் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மாணிக்கம் அத்தப்ப கவுண்டர்.

அவர் மேலும் கூறியதாவது:

இன்று கழிவுநீரைச் சுத்திகரித்து, மீண்டும் பயன்படுத்துவதற்கான நவீன தொழில்நுட்பங்கள் முழுமையாகக் கிடைக்கின்றன. வீடுகளுக்கு பயோ செப்டிக் டேங்க், குடியிருப்புகள் மற்றும் நிறுவனங்களுக்கு நவீன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், நகரங்களில் கால்வாய்களின் மேலேயே அமைக்கக்கூடிய சுத்திகரிப்பு அமைப்புகள் என, பல்வேறு தேவைகளுக்கும் நடைமுறைத் தீர்வுகள் உள்ளன.

சுத்திகரிக்கப்பட்ட நீரைத் தோட்டப் பராமரிப்பு, விவசாயம், கட்டுமானம், தொழிற்சாலைப் பயன்பாடு, சாலை சுத்தம் செய்தல் போன்ற குடிநீரல்லாத தேவைகளுக்குப் பயன்படுத்தலாம். உரிய தரப் பரிசோதனை மற்றும் அரசு அனுமதியுடன் ஏரி, குளங்கள் போன்ற நீர்நிலைகளைப் புதுப்பிக்கவும் பயன்படுத்தலாம். இதனால் குடிநீரின் பயன்பாடு பெருமளவு குறைவதுடன், நிலத்தடி நீர் மாசுபடுவதையும் தடுக்க முடியும்.

‘இனி தொழில்நுட்பம் இல்லை’ என்ற காரணத்தைக் கூற முடியாது. தேவையானது அரசியல் மனஉறுதி, தெளிவான அரசுக் கொள்கை மற்றும் உறுதியான நடைமுறைப்படுத்தல் மட்டுமே. ஒவ்வொரு புதிய கட்டடத்திற்கும் கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் மறுபயன்பாட்டுத் திட்டத்தை, கட்டட அனுமதியின் ஒரு பகுதியாக கட்டாயமாக்க வேண்டும்.

ஏற்கெனவே உள்ள கட்டடங்கள், நிறுவனங்கள் மற்றும் நகரங்களுக்கும் காலக்கெடு நிர்ணயித்து இதைச் செயல்படுத்த வேண்டும். ‘கழிவுநீர் என்பது கழிவு அல்ல; சுத்திகரிக்கப்பட்டால் அது மீண்டும் பயன்படும் நீர்வளம். அடுத்த தலைமுறைக்குச் சொத்துகளை மட்டும் விட்டுச் செல்வது வளர்ச்சி அல்ல. சுத்தமான நீரையும், மாசுபடாத நிலத்தையும் விட்டுச் செல்வதே உண்மையான வளர்ச்சி.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us