ADDED : செப் 26, 2025 11:46 PM

புதுடில்லி:ரேமண்ட் லைப்ஸ்டைல் நிறுவனத்துக்கு சம்பந்தப்பட்ட அலுவலகங்கள் மற்றும் உற்பத்தி ஆலைகளில் வருமான வரித்துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
நேற்று முன்தினம் துவங்கிய இந்த ஆய்வு, தொடர்ந்து நடைபெற்று வருவதாக ரேமண்ட் லைப்ஸ்டைல் மற்றும் ரேமண்ட் ரியால்டி நிறுவனங்கள், தங்களது பங்குச்சந்தை தாக்கலில் தெரிவித்துள்ளன.
ஆய்வுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளன. இந்த செய்தி வெளியானதைத் தொடர்ந்து, நேற்று தேசிய பங்குச் சந்தையில் நிறுவனத்தின் பங்கு விலை 4.12 சதவீதம் சரிந்து 1,202.70 ரூபாய்க்கு வர்த்தகமானது. நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மும்பையிலும், கார்ப்பரேட் அலுவலகம் தானேவிலும் உள்ளது.
வருமான வரி சட்டப் பிரிவு 133 ஏ படி, ஆய்வு நடத்த வரித்துறையினருக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.
சோதனை நடவடிக்கைகளைக் காட்டிலும் இதற்கான அதிகாரம் சற்று குறைவு தான் என்றாலும், வரி ஏய்ப்பு நடைபெற்றிருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க இது போதுமானதாகும்.