செஞ்சுரி பேப்பரை கையகப்படுத்த ஐ.டி.சி.,க்கு ஒப்புதல்
செஞ்சுரி பேப்பரை கையகப்படுத்த ஐ.டி.சி.,க்கு ஒப்புதல்
ADDED : டிச 18, 2025 12:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மும்பை: 'செஞ்சுரி பல்ப் அண்டு பேப்பர்' நிறுவனத்தை கையகப்படுத்துவதற்கு, இந்திய போட்டி ஆணையத்தின் ஒப்புதலை ஐ.டி.சி., நிறுவனம் பெற்றுள்ளது.
ஆதித்ய பிர்லா குழுமத்துக்கு சொந்தமான செஞ்சுரி பல்ப் அண்டு பேப்பர் நிறுவனத்தை கையகப்படுத்த இருப்பதாக, கடந்த மார்ச்சில் ஐ.டி.சி., நிறுவனம் முதல்முறையாக அறிவித்தது.
இதன் வாயிலாக, நுகர்பொருள் முதல் தகவல் தொழில்நுட்பம் வரை, பல்வேறு துறைகளில் செயல்படும் ஐ.டி.சி., நிறுவனத்தின் பங்களிப்பு, காகித அட்டை மற்றும் பேக்கேஜிங் துறையில் கணிசமாக அதிகரிக்கும்.
இருப்பினும், எவ்வளவு தொகைக்கு நிறுவனத்தை ஐ.டி.சி., கையகப்படுத்துகிறது என்பது தொடர்பான விபரங்கள் வெளியிடப்படவில்லை.

