சிறுசேரி ‘சிப்காட்’ வளாகத்தில் ‘ஜியோ’ ஏ.ஐ., தரவு மையம்
சிறுசேரி ‘சிப்காட்’ வளாகத்தில் ‘ஜியோ’ ஏ.ஐ., தரவு மையம்
UPDATED : அக் 09, 2026 12:00 AM
ADDED : அக் 08, 2026 11:06 PM

சென்னை: சிறுசேரியில் உள்ள, ‘சிப்காட்’ தொழில் பூங்காவில், 10 ஏக்கரில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தரவு மையம் அமைக்க உள்ளது.
ஓ.எம்.ஆர்., சிறுசேரியில், ‘சிப்காட்’ எனப்படும் தமிழக தொழில் முன்னேற்ற நிறுவனத்திற்கு, தகவல் தொழில்நுட்ப பூங்கா உள்ளது.
அங்கு, ‘டாடா கன்சல்டன்சி சர்வீஸ்’ உள்ளிட்ட முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்படுகின்றன.
ரிலையன்ஸ் குழுமத்தை சேர்ந்த ரிலையன்ஸ் ஜியோ, இங்கு ஏ.ஐ., தரவு மையத்தை அமைக்க உள்ளது. இதற்காக, 10 ஏக்கர் நிலத்தை சிப்காட் ஒதுக்கீடு செய்துள்ளது.
ஏற்க னவே, அந்த வளாகத்தில் சிபி, அதானி கனெக்ஸ், என்.பி.சி.ஐ., நெக்ஸ்ட்ரா, டெக்னோ எலக்ட்ரிக், ஈக்யூனிக்ஸ் ஆகிய நிறுவனங்களின் தரவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
தற்போது ஜி யோ நிறுவனம், தலா ஐந்து தளங்களை கொண்ட இரண்டு கட்டடங்களில் தரவு மையங்களை அமைக்கவுள்ளது.
