ADDED : டிச 25, 2025 01:16 AM

புதுடில்லி: ஜே.கே., டயர்ஸ், கேவண்டிஷ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை முழுமையாகத் தன்னுடன் இணைத்துக்கொள்வதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்த அதன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கேவண்டிஷ் நிறுவனத்தை ஜே.கே., டயர்ஸ் உடன் இணைப்பதற்கான அனைத்து நடைமுறைகளும் நிறைவடைந்து விட்டன. இதன் வாயிலாக, சிறந்த செயல்பாட்டு திறன், அடுத்தகட்ட வளர்ச்சி, கூடுதல் தயாரிப்புகளை அறிமுகப்படுத்துதல், வினியோக வலையமைப்பை விரிவுபடுத்துதல் ஆகியவை சாத்தியப்படும்.
கடந்த 2016ல் கெசோரம் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திடம் இருந்து கேவண்டிஷை ஜே.கே.டயர்ஸ் வாங்கியது. அப்போது பஸ், லாரிகளுக் கான ரேடியல்கள், வாகன டயர்களை உற்பத்தி செய்து கொண்டிருந்த கேவண் டிஷ், தனது உற்பத்தி திறனில் 30 சதவீதத்தை தான் பயன்படுத்தி வந்தது.
ஆனால், ஜே.கே.டயர்ஸ் கையகப்படுத்திய பிறகு அது 95 சதவீதமாக உயர்ந்து விட்டது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

