தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ எம்.எஸ்.எம்.இ.,களுக்கு எல்.பி.ஜி., சிலிண்டர் பங்கீடு அடிப்படையில் கேட்கிறது 'கொடிசியா'

 எம்.எஸ்.எம்.இ.,களுக்கு எல்.பி.ஜி., சிலிண்டர் பங்கீடு அடிப்படையில் கேட்கிறது 'கொடிசியா'

 எம்.எஸ்.எம்.இ.,களுக்கு எல்.பி.ஜி., சிலிண்டர் பங்கீடு அடிப்படையில் கேட்கிறது 'கொடிசியா'


ADDED : மார் 26, 2026 01:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 26, 2026 01:49 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களில் வேலை இழப்புகளை தடுக்க பங்கீடு அடிப்படையில் எல்.பி.ஜி., சிலிண்டர்களை ஒதுக்கீடு செய்ய 'கொடிசியா' கோரிக்கை விடுத்துள்ளது.

பிரதமர் மோடிக்கு 'கொடிசியா' தலைவர் கார்த்திகேயன் அனுப்பியுள்ள கோரிக்கை மனு:

கோவையில் 2.50 லட்சம் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உள்ளன. தொழிற்சாலைகளில், 19 கிலோ, 33 கிலோ, 47.50 கிலோ மற்றும் 425 கிலோ வணிக சிலிண்டர்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள் மாதந் தோறும் 1.20 லட்சம் எண்ணிக்கையிலான 19 கிலோ காஸ் சிலிண்டர்களை பயன்படுத்துகின்றன.

இதில், 60,000 சிலிண்டர்கள் லேசர் கட்டிங், பவர் கோட்டிங் போன்றவற்றுக்கும், 45 ஆயிரம் சிலிண்டர்கள் பவுண்டரி உள்ளிட்டவற்றுக்கும், 15,000 சிலிண்டர்கள் உணவு தயாரிப்பு பிரிவுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.

கடந்த, 9ம் தேதி முதல் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியன தொழில் நிறுவனங்களுக்கான எல்.பி.ஜி., சிலிண்டர் வினியோகத்தை நிறுத்தி விட்டன.

இதனால், 30 சதவீதம் நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. பல நிறுவனங்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால் 4 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அலுமினியம், தாமிரம், பிளாஸ்டிக் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலையேற்றம் காரணமாக எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள் தற்போது கடுமையான நெருக்கடியில் உள்ளன.

பாதிப்புகளை தவிர்க்க, மூலப்பொருட்கள் அனைத்துக்கும் இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும். மூலப்பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதை தடுக்க, அவற்றுக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்க வேண்டும். காஸ் சிலிண்டர்களை பங்கீடு அடிப்படையில் வழங்க வேண்டும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

 கோவையில் 2.50 லட்சம் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உள்ளன

 மாதம் தோறும் 1.20 லட்சம் எம்.எஸ்.எம்.இ.,க்கள் 19 கிலோ காஸ் சிலிண்டர்களை பயன்படுத்துகின்றன

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us