ADDED : டிச 24, 2025 04:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி,எல் அண்டு டி., நிறுவனம் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்திடம் இருந்து கிட்டத்தட்ட 10,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டரை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் உள்ள பினா சுத்திகரிப்பு ஆலையில், பாலிஎத்திலின் உற்பத்தி செய்யும் ஆலைகளை அமைப்பதற்காக இந்த ஆர்டரை எல். அண்டு டி.,யின் ஹைட்ரோகார்பன் வணிகப்பிரிவு பெற்றுள்ளது. இதன்படி, ஆண்டுக்கு தலா 5.75 லட்சம் டன் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு பிரிவுகள் அமைக்கப்படும்.
இது இந்தியாவின் மிகப்பெரிய பாலிஎத்திலின் உற்பத்தி பிரிவாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. பாலிஎத்திலின் என்பது அதிகம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் வகைகளில் ஒன்றாகும்.

