தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ தலைமைத்துவ பயிற்சி வகுப்பு தொழில் முனைவோருக்கு அழைப்பு

 தலைமைத்துவ பயிற்சி வகுப்பு தொழில் முனைவோருக்கு அழைப்பு

 தலைமைத்துவ பயிற்சி வகுப்பு தொழில் முனைவோருக்கு அழைப்பு


UPDATED : பிப் 17, 2026 01:20 AM

ADDED : பிப் 17, 2026 01:19 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 17, 2026 01:20 AM ADDED : பிப் 17, 2026 01:19 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: தொழில்முனைவோர் மற்றும் உயரதிகாரிகளுக்கான மூன்று நாள்கள் தலைமைத்துவ பயிற்சி வகுப்பை, 'க்ரியா' பல்கலைக்கழகத்துடன் இணைந்து 'மேஜிக் 20 தமிழ்' நிறுவனம் நடத்துகிறது.

சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீசிட்டியின் க்ரியா பல்கலை வளாகத்தில், வரும் 21, 22 மற்றும் 23ம் தேதிகளில் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.

இதில், தலைமை பண்பு, பொருளாதாரம் மற்றும் சந்தைப்படுத்தல், நிதி உள்பட பல்வேறு தலைப்புகளில் பேராசிரியர்களின் உரை, கலந்துரையாடல் மற்றும் 'கேஸ் ஸ்டடி' ஆகியவை இடம்பெற உள்ளன. ஏற்கனவே, இரண்டு முறை பயிற்சி வகுப்புகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன.

தற்போது மூன்றாவது முறையாக பயிற்சி வகுப்பு நடத்த திட்டமிட்டப்பட்டுள்ளது.

அடுத்த கட்ட வளர்ச்சிக்கு ஆயத்தமாகும் தொழில் முனைவோர்கள், தொழில்முனைவோர் ஆக விரும்புகிறவர்கள், உயர் பொறுப்புகளில் இருப்பவர்கள், பெண் தொழில்முனைவோருக்கு ஏற்றதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

மூன்று நாட்களும் பல்கலை வளாகத்தில் தங்கி, பயிற்சியில் பங்கேற்பதற்கு உணவு, தங்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Image 1536921

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us