தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ தலைமைத்துவ பயிற்சி வகுப்பு தொழில்முனைவோருக்கு வாய்ப்பு

 தலைமைத்துவ பயிற்சி வகுப்பு தொழில்முனைவோருக்கு வாய்ப்பு

 தலைமைத்துவ பயிற்சி வகுப்பு தொழில்முனைவோருக்கு வாய்ப்பு


ADDED : பிப் 14, 2026 01:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 14, 2026 01:06 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: தொழில்முனைவோர் மற்றும் உயரதிகாரிகளுக்கான மூன்று நாள் தலைமைத்துவ பயிற்சி வகுப்பை, 'க்ரியா' பல்கலைக்கழகத்துடன் இணைந்து, 'மேஜிக் 20 தமிழ்' நிறுவனம் நடத்த உள்ளது.

சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீசிட்டியில் அமைந்துள்ள, க்ரியா பல்கலை., வளாகத்தில், வரும் 21 முதல் 23ம் தேதி வரை, மூன்று நாட்கள் பயிற்சி நடைபெறும். இந்த பயிற்சி வகுப்பில், தலைமை பண்பு, பொருளாதாரம் மற்றும் சந்தைப்படுத்தல், நிதி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்த பேராசிரியர்கள் உரை, கலந்துரையாடல், 'கேஸ் ஸ்டடி' போன்றவை இடம்பெற உள்ளன. இது 'மேஜிக் 20' நிறுவனம், மூன்றாவது முறையாக நடத்தும் பயிற்சி வகுப்பாகும்.

அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு தயாராகி வரும் தொழில்முனைவோருக்கு மட்டுமின்றி, தொழில்முனைவோர் ஆக விரும்புவோர், உயர் பொறுப்புகளில் இருப்போர் ஆகியோருக்கும் உதவும் வகையில் இந்த பயிற்சி திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மூன்று நாட்களும் பல்கலைக்கழக வளாகத்திலேயே தங்கியிருந்து பயிற்சி பெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கூடுதல் விபரங்களுக்கு, 78455 69820 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us