தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/மகிழ்ச்சியுடன் கற்றல், மதிப்புகளுடன் வளர்தல்

மகிழ்ச்சியுடன் கற்றல், மதிப்புகளுடன் வளர்தல்

மகிழ்ச்சியுடன் கற்றல், மதிப்புகளுடன் வளர்தல்


UPDATED : அக் 12, 2026 05:41 PM

ADDED : அக் 12, 2026 05:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 12, 2026 05:41 PM ADDED : அக் 12, 2026 05:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கல்வி என்பது மதிப்பெண்களைப் பெறுவதற்கான பயணம் மட்டுமல்ல; நல்ல பண்புகள், தன்னம்பிக்கை, மன உறுதி, வாழ்க்கையை எதிர்கொள்ளும் திறன்களை வளர்த்துக்கொள்வதற்கான பாதையாகவும் இருக்கிறது. குழந்தைகள் மகிழ்ச்சியுடன் கற்று, தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தி, பொறுப்புள்ள மனிதர்களாக வளர வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது உப்பிலிபாளையத்தில் அமைந்துள்ள பெர்க்ஸ் பப்ளிக் பள்ளி.

பிரபல குழந்தைகள் நல மருத்துவர், பள்ளியின் தாளாளர் டாக்டர் உஷா இளங்கோவின் வழிகாட்டுதலில், கல்வியுடன் நற்பண்புகளையும் வாழ்க்கை மதிப்புகளையும் இணைக்கும் வகையில் பள்ளியின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.

இங்கு தமரா எர்லி எஜீகேஷன் முறையில், மாண்டிசோரி அடிப்படையிலான விளையாட்டு வழிக் கற்றல் பின்பற்றப்படுகிறது. ஆசிரியர்களின் எல்.ஆர்.பி.ஏ.எக்ஸ்., கற்றல் அணுகுமுறை ஐந்து படிநிலைகளாக அமைந்துள்ளது: கற்றல்,வலியுறுத்தல், பயிற்சி, செயல்படுத்துதல், அனுபவம் என்பதாகும்.

மாணவர்களுக்கு தனி கவனமும் தகுந்த செயல்முறை பாடங்களும் கனிவுடன் கற்றுத் தரப்படுகிறது. அனைத்துப் பாடங்களுக்கும் ஒலிம்பியாட் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. பெரிய நூலகம், அறிவியல் ஆய்வுக்கூடம்,ரோபோட்டிக்ஸ் ஆய்வகம் உள்ளன.

தேசிய அளவிலான பயிற்சியாளர்களின் வழிகாட்டுதலில் டென்னிஸ், நீச்சல், பேட்மிண்டன், கூடைப்பந்து, ஸ்கேட்டிங், வில்வித்தை, சிலம்பம், மல்லர் கம்பம், கராத்தே, செஸ், ஏரோபிக்ஸ் ஆகியவை கற்றுத்தரப்படுகின்றன.கீபோர்டு, டிரம்ஸ், இசை, நடனம் போன்ற கலைகளிலும் திறன் வளர்ப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஸ்கவுட்ஸ் அண்ட் கைட்ஸ், கிளப்ஸ் மூலம் மாணவர்கள் சிறு வயது முதலே வாழ்க்கைப் பாடங்களையும் மன உறுதியையும் நற்பண்புகளையும் கற்றுக்கொள்கின்றனர்.

உள்ளடக்கிய கல்வி மனநலத்திற்காகச் சிறப்புக் கல்வியாளர்களும் உளவியல் ஆலோசகர்களும் பணியாற்றுகின்றனர். பள்ளி மைதானத்தில் கோவையிலேயே முதன்முறையாகக் கட்டப்பட்ட பிரமிடு தியான மையம் அமைந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us