எல்ஐசி 70 ஆண்டுகள் நிறைவு இரண்டு புதிய திட்டங்கள் அறிமுகம் 70ம் ஆண்டில் காலத்துக்கேற்ற புதிய திட்டங்கள்
எல்ஐசி 70 ஆண்டுகள் நிறைவு இரண்டு புதிய திட்டங்கள் அறிமுகம் 70ம் ஆண்டில் காலத்துக்கேற்ற புதிய திட்டங்கள்
ADDED : செப் 02, 2026 03:02 AM

மும்பை: எல்.ஐ.சி., நிறுவனம், தனது 70 ஆண்டுகளை நிறைவு செய்து நாட்டின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமாக தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.
இதுகுறித்து எல்.ஐ.சி., கூறியுள்ளதாவது:
கடந்த 1956ம் ஆண்டு 5 கோடி ரூபாய் முதலீட்டுடன் தொடங்கப்பட்ட எல்.ஐ.சி., தற்போது 7.29 லட்சம் கோடி ரூபாய் சந்தை மூலதனத்தை கொண்டுள்ளது. இந்த ஆண்டு மார்ச் 31 நிலவரப்படி, எல்.ஐ.சி., 67.29 லட்சம் கோடி ரூபாய் சொத்து நிர்வாகம் செய்யும் நிறுவனமாக உயர்ந்துள்ளது.
நாடு முழுதும் 2,000க்கும் மேற்பட்ட கிளைகள் மற்றும் விரிவான முகவர் வலையமைப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், 2022ம் ஆண்டு எல்.ஐ.சி., பங்குகள் முதன்முறையாக பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டன. ஐ.பி.ஓ., வாயிலாக, அரசின் 3.50 சதவீத பங்குகள் விற்பனை செய்யப்பட்டு 20,500 கோடி ரூபாய் திரட்டப்பட்டது. பின்னர், ஆபர் பார் சேல் முறையில் மேலும் 6.50 சதவீத பங்குகளை விற்று 31,552 கோடி ரூபாய் திரட்டப்பட்டது.
அடுத்த 70 ஆண்டுகளுக்கான வளர்ச்சியில், வாடிக்கையாளர் தேவைகளுக்கு ஏற்ப புதிய தயாரிப்புகள், டிஜிட்டல் சேவைகள், ஏ.ஐ., பயன்பாடு மற்றும் தனிநபர் காப்பீட்டு திட்டங்களை விரிவுபடுத்த எல்.ஐ.சி., கவனம் செலுத்துகிறது.
பீமா பிளாட்டினம்: பிரீமியத்தில் 1,000 ரூபாய்க்கு 70 ரூபாய் உத்திரவாத
தொகை, பே அவுட் காலத்தில் அடிப்படை காப்பீட்டு தொகையில் 10 சதவீதம் தொடர்
வருமானம்.
ஜீவன் ரக்ஷா: 5 லட்சம் ரூபாய் முதல் 24 லட்சம் ரூபாய் வரை காப்பீடு; பெண்களுக்கான சிறப்பு பிரீமிய கட்டண சலுகைகள்
