தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ சுண்ணாம்புக்கல் குவாரிகள் மொத்த ஏலம் விட நடவடிக்கை

 சுண்ணாம்புக்கல் குவாரிகள் மொத்த ஏலம் விட நடவடிக்கை

 சுண்ணாம்புக்கல் குவாரிகள் மொத்த ஏலம் விட நடவடிக்கை


ADDED : பிப் 05, 2026 03:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 05, 2026 03:02 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை : சிமென்ட் தயாரிப்பதற்கு தேவைப்படும் லைம் ஸ்டோன் எனப்படும் சுண்ணாம்புக்கல் குவாரிகளை, மொத்த தொகுதியாக ஏலம் விடும் நடவடிக்கையில் கனிம வளத்துறை ஈடுபட்டுள்ளது.

தமிழகத்தில் அரியலுார், கள்ளக்குறிச்சி, கோவை உள்பட பல மாவட்டங்களில் சுண்ணாம்புக்கல் படிமங்கள் இருக்கின்றன. கனிம வளத்துறை ஆய்வு அடிப்படையில், இந்த இடங்களுக்கு எல்லைகள் வரையறுக்கப்பட்டன.

இதன்படி, ஒவ்வொரு இடத்திலும் எவ்வளவு சுண்ணாம்புக்கல் கிடைக்கும் என்பது மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மதிப்பீடுகள் அடிப்படையில், ஏலம் வாயிலாக குவாரி உரிமங்கள் வழங்கப்படுகின்றன.

பெரும்பாலும் சிமென்ட் தயாரிப்பு நிறுவனங்கள் தான் இந்த குவாரிகளை குத்தகைக்கு எடுக்க முன்வரும். இதில், ஒவ்வொரு குவாரியும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் குத்தகை விடப்படுகிறது.

உதாரணமாக, ஒரு மாவட்டத்தில் ஒரே தாலுகாவில், 10 இடங்களில் குவாரிகள் திறக்க வாய்ப்பு இருந்தாலும். அதை பட்டியலிட்டு ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக ஏலம் விடுவது வழக்கமாக இருந்தது.

ஆனால், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 13 இடங்களில் உள்ள சுண்ணாம்புக்கல் குவாரிகளை ஒன்று சேர்த்து, மொத்தமாக ஏலம் விடுவதற்கான பணிகளை கனிம வளத்துறை துவக்கி உள்ளது.

இதுகுறித்து கனிம வளத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “சிறு கனிமங்கள் ஏலம் விடுவது தொடர்பாக, 2015ல் விதிகள் வெளியிடப்பட்டன. இதில், 2025ல் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் அடிப்படையில் ஏலம் விடும் நடைமுறைகளில் மாற்றங்கள் வந்துள்ளன. இதன் அடிப்படையிலேயே காம்போசிட் எனப்படும் மொத்தமாக குவாரிகள் ஏலம் விடப்படுகின்றன” என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us