ADDED : ஜன 22, 2026 01:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஹைதராபாத்: சர்வதேச அழகு சாதன நிறுவனமான 'லோரியல்', தன் முதலாவது 'ஏ.ஐ., பியூட்டி டெக் இன்னோவேஷன் ஹப்' எனும் ஏ.ஐ., சார்ந்த அழகு தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மையத்தை, தெலுங்கானா தலைநகர் ஹைதராபாதில் அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் உலக பொருளாதார மன்ற மாநாட்டில் பங்கேற்ற லோரியல் தலைமை செயல் அதிகாரி நிக்கோலஸ் ஹிரோனிமஸ், இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இதற்காக வரும் 2030க்குள் கிட்டத்தட்ட 3,500 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக ஏ.ஐ., நிபுணர்கள், தரவு அறிவியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப பொறியாளர்கள் என 2,000 உயர்நிலை வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

