உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : மார் 22, 2026 01:45 AM

அ நிறம் | அளவு
புதுடில்லி,பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிரபல அழகு சாதன பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான லோரியல், இந்தியாவின் 'இனோவிஸ்ட்' நிறுவனத்தை கையகப்படுத்த தீவிர பேச்சு நடத்தி வருகிறது.
'பேர் அனாடமி', 'கெமிஸ்ட் அட் பிளே' மற்றும் 'சன்ஸ்கூப்' போன்ற முக்கிய பிராண்டுகளை கைவசம் வைத்திருக்கும் இனோவிஸ்ட் நிறுவனத்தை கையகப்படுத்த, ஓராண்டுக்கும் மேலாக லோரியல் முயற்சிப்பதாகவும், இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு கிட்டத்தட்ட 4,000 கோடி ரூபாய் இருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
லோரியல் இந்தியா நிறுவனத்தின் விற்பனையில் ஏற்பட்டுள்ள சரிவை சரிகட்ட, புதிய பிராண்டுகளை கைப்பற்றுவதில் இந்நிறுவனம் ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
