ADDED : அக் 22, 2024 10:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்திய தொழிலதிபர் யூசுப் அலி என்பவரால் கடந்த 1974ம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்சில் துவங்கப்பட்ட 'லுாலுா ரீட்டெய்ல் ஹோல்டிங்ஸ்' சூப்பர் மார்க்கெட் நிறுவனம், அந்நாட்டில் புதிய பங்குகளை வெளியிடவுள்ளது.
இந்நிறுவனம் வரும் 28ம் தேதி யு.ஏ.இ.,யில் புதிய பங்கு வெளியீட்டுக்கு வருகிறது. இதில் நிறுவனத்தின் 25 சதவீத பங்குகள் வெளியிடப்பட உள்ளன. இதன் வாயிலாக, இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட 15,000 கோடி ரூபாய் திரட்டப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிறுவனத்தின் பங்குகள் அடுத்த மாதம் 14ம் தேதி ஏ.டி.எக்ஸ்., எனும் அபுதாபி சந்தையில் பட்டியலிடப்படும். நடப்பாண்டில் இதுதான் ஐக்கிய அரபு எமிரேட்சின் மிகப் பெரிய ஐ.பி.ஒ., வாக இருக்கும் என கூறப்படுகிறது.