ADDED : ஆக 07, 2025 02:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:மஹிந்திரா அண்டு மஹிந்திரா நிறுவனத்தின் தொழிற்சாலை மற்றும் விற்பனையகங்களில் பணிபுரியும் 23,000 பணியாளர்களுக்கு, 400 - 500 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை தீபாவளி போனஸ் ஆக வழங்க உள்ளதாக, தலைமை செயல் அதிகாரி அனீஷ் ஷா தெரிவித்துள்ளார்.
குறைந்தபட்சம் ஓர் ஆண்டு பணியாற்றிய பணியாளர்கள் போனஸ் பெற தகுதி பெறுவார்கள்.
மஹிந்திரா எலக்ட்ரிக் ஆட்டோமொபைல் மற்றும் மஹிந்திரா லாஸ்ட் மைல் மொபிலிட்டி ஆகிய துணை நிறுவன பணியாளர்களுக்கும் போனஸ் பொருந்தும்.