
எல்.ஐ.சி., பங்கு விற்பனை
பொதுத்துறை காப்பீடு நிறுவனமான எல்.ஐ.சி.,யின் 6.50 சதவீத பங்குகளை விற்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கடந்த 2022 மே மாதம், 3.50 சதவீத பங்குகளை விற்றதன் வாயிலாக, 21,000 கோடி ரூபாயை அரசு திரட்டி இருந்தது. தற்போது, மத்திய அரசின் வசம் எல்.ஐ.சி.,யின் 96.50 சதவீத பங்குகள் உள்ளன. இந்நிலையில், 2027, மே மாதத்துக்குள், 10 சதவீத பொதுமக்களின் பங்களிப்பை எட்டும் நடவடிக்கையாக, 6.50 சதவீத பங்கு விற்பனைக்கு திட்டமிட்டுள்ளது.
ரூ.25,000 கோடி திரட்டும் எஸ்.பி.ஐ.,
கடன் வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி திரட்டும் வகையில், 25,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை, தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்ய எஸ்.பி.ஐ., திட்டமிட்டுள்ளது. முழு மதிப்புக்கு பங்குகள் விற்பனையாகும் பட்சத்தில், கோல் இந்தியாவின் பங்கு விற்பனையை எஸ்.பி.ஐ., முறியடித்து, நாட்டின் மிகப்பெரிய தகுதிவாய்ந்த நிறுவன முதலீடு என்ற சாதனையை படைக்கும்.

