ADDED : பிப் 18, 2026 01:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:உலகின் மூன்றாவது பெரிய கார் நிறுவனமும், இந்தியாவின் மிகப்பெரிய கார் நிறுவனமுமான மாருதி சுசூகி மோட்டார் கம்பெனி இந்தியாவில் முதல் மின்சார காரை நேற்று அறிமுகம் செய்துள்ளது.
மாருதி சுசூகியின் 'விட்டாரா' மாடலில் எஸ்.யூ.வி., மாடல் மின்சார காரை அறிமுகம் செய்துள்ளது.
இதன் விலை 11 லட்சம் ரூபாய். ஆரம்ப செலவுகளை குறைக்க, வாடிக்கையாளர்களுக்கு பேட்டரி வாடகை திட்டத்தையும் இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. பேட்டரி வாடகை திட்டத்தின் கீழ் ஒரு கிலோ மீட்டருக்கு 3.99 ரூபாய் தான் செலவாகும் என கூறியுள்ளது.

