‘பீக் ஹவர்’ மாற்றத்தால் பாதிப்பு குறு, சிறு நிறுவனங்கள் கவலை
‘பீக் ஹவர்’ மாற்றத்தால் பாதிப்பு குறு, சிறு நிறுவனங்கள் கவலை
UPDATED : நவ 30, 2026 12:00 AM
ADDED : நவ 29, 2026 10:50 PM
கோவை: ‘பீக் ஹவர்’ உயர்த்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரைத்திருப்பதால், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன.
மூலப்பொருள் விலை உயர்வு, மின் கட்டணம், தொழிலாளர் பற்றாக்குறை உள்ளிட்ட பல பிரச்னைகளை, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் சந்திக்கின்றன. மின்வாரியம், 2.5 லட்சம் கோடி ரூபாய் கடனில் உள்ளது.
இதை சமாளிப்பதற்காக தற்போதுள்ள பீக் ஹவர் முறையில் மாற்றம் கொண்டு வர, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. தற்போது காலை, 6 முதல், 10 மணியும், மாலை, 6 முதல், 10 மணியும் பீக் ஹவர் ஆகும். காலை, 6 முதல், 8 மணி வரையும், மாலை, 5 முதல் நள்ளிரவு, 12 மணி வரையும் பீக் ஹவராக செயல்பட பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதனால், மின் கட்டணம் உயர்ந்து, தொழில்துறை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பீக் ஹவரை உயர்த்த கூடாது என்று முதல்வருக்கு, ரயில்வே உபகரணங்கள் வழங்குநர் சங்கத் தலைவர் சுருளிவேல் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் கூறியதாவது:
பீக் ஹவர் நேரம் மாற்றத்தால் பாதிப்பு அதிகரிக்கும். சோலார் கூரையின் முதலீட்டு பலனையும் இது பாதிக்கும். பல பகுதிகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி முடியவில்லை. பரிந்துரை செய்யப்பட்டுள்ள பீக் ஹவரை வெளிப்படைத்தன்மையுடன், செயல்படுத்துவது குறித்து கவலை எழுகிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.
