தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ வேலைக்காக இடம்பெயர்வதை தடுக்க 'மைக்ரோ' தொழில்நுட்ப பூங்காக்கள்

 வேலைக்காக இடம்பெயர்வதை தடுக்க 'மைக்ரோ' தொழில்நுட்ப பூங்காக்கள்

 வேலைக்காக இடம்பெயர்வதை தடுக்க 'மைக்ரோ' தொழில்நுட்ப பூங்காக்கள்


ADDED : செப் 15, 2026 03:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 15, 2026 03:21 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: வேலைக்காக இடம்பெயர்வை தடுக்கவும்; உள்ளூரிலேயே தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்பு கிடைக்கவும், 'மைக்ரோ' தொழில்நுட்ப பூங்காக்களை, தமிழக அரசின், 'டிட்கோ' நிறுவனம் அமைக்க உள்ளது.

தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் தான் அதிக எண்ணிக்கையில், தகவல் தொழில்நுட்ப துறை நிறுவனங்கள் உள்ளன.

மாநிலம் முழுதும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளை முடித்தவர்கள் வேலைக்காக சென்னை வருகின்றனர்.

அவர்கள், வேலைக்காக இடம்பெயர்வதை தடுக்க, 'மைக்ரோ டெக் பார்க்' எனப்படும் குறு தொழில்நுட்ப பூங்காக்களை அரசு அமைக்க உள்ளது.

இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

சென்னையை தொடர்ந்து, இரண்டாம் கட்ட நகரங்களில் ஐ.டி., வேலைவாய்ப்பு கிடைக்க கோவை, மதுரை, விழுப்புரம் உள்ளிட்ட இரண்டாம் கட்ட நகரங்களில் டைடல் பார்க், நியோ டைடல் பார்க் கட்டப்பட்டன.

தற் போது, உள்ளூரிலேயே வேலைவாய்ப்பை உருவாக்க மைக்ரோ டெக் பார்க் அமைக்கப்ப ட உள்ளது. குறைந்த சதுர அடி கட்டடத்துடன், அதிவேக இணையதள வசதிகள் ஏற்படுத்தி தரப்படும். இதன் வாயிலாக நகரங்களுக்கு செல்லாமல், சொந்த ஊர்களில் இருந்தபடி இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெற முடியும். வீட்டில் இருந்தபடி பணிபுரியும் சூழல் கிடைக்கும்.

முத ற்கட்டமாக கோவை மாவட்டம் பொள்ளாச்சி, துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மைக்ரோ தொழில்நுட்ப பூங் காக்கள் அமைக்கப்பட உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

பெரு நகரங்களில் - டைடல் பார்க் நடுத்தர நகரங்களில் - நியோ பார்க் சிறு நகரங்களில் - மைக்ரோ பார்க் 'மைக்ரோ பார்க்' அமைவிடம் கோவை மாவட்டம் பொள்ளாச்சி துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us