தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ 'மைனஸ் அமெரிக்கா' பட்ஜெட்டா?

 'மைனஸ் அமெரிக்கா' பட்ஜெட்டா?

 'மைனஸ் அமெரிக்கா' பட்ஜெட்டா?


ADDED : பிப் 02, 2026 04:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 02, 2026 04:11 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ந ே ற்று தாக்கல் செய்யப்பட்ட, 'மத்திய பட்ஜெட் 2026 -27' ஒரு 'மைனஸ் அமெரிக்கா' பட்ஜெட் என்கிற கருத்து முன்வைக்கப்பட்ட நிலையில், பொருளாதார விமர்சகரும், 'மைஅசெட்கன்சாலிடேஷன்.காம்' நிறுவனத்தின் நிறுவனருமான சுரேஷ் பார்த்தசாரதி அதற்கு விளக்கம் அளித்துள்ளார்:

உலக பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இந்த பட்ஜெட் மிகவும் பரபரப்பில்லாத, பாதுகாப்பான, சமநிலை பட்ஜெட்டாக உள்ளது.

தற்போதைய நிலையில் ஆண்டுக்கு 61,000 ஹெச்-1பி விசாக்கள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. இந்த பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன், அமெரிக்காவுக்கு எதிரான அறிவிப்புகளை வெளியிட்டிருந்தால், முதலில் டிரம்ப் கைவைப்பது இந்த விசா விஷயத்தில் தான்.

ஆகையால் இந்த பட்ஜெட்டில் மத்திய அரசாங் கம் எந்தவொரு கடுமையான அறிவிப்பையும் வெளியிடாதது நன்மையே. கடந்த ஆண்டு அமெரிக்காவின் வரி நடவடிக்கைகளால் ரூபாய் மதிப்பு சரிவடைந்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்பட்டனர்.

இருப்பினும், அரசாங்கத்தால் பெரிய நிதி துாண்டுதல்களை அப்போது வழங்க முடியவில்லை. நடப்பு பட்ஜெட்டில், உற்பத்திகளை அதிகப்படுத்தி ஏற்றுமதிகளை உயர்த்துவது குறித்த அறிவிப்புகள் வெளியாகியிருக்கின்றன.

முந்திரியை ஆப்ரிக்க நாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதை விட, இந்தியாவில் உற்பத்தியை ஊக்கப்படுத்தப்படுவதால் சிறிய விவசாயிகள் அதிக லாபம் பெற முடியும். சமீபத்தில் ஐரோப்பிய நாடுகளுடன் வர்த்தக உடன்பாடு ஏற்பட்டதால், ஜவுளி ஏற்றுமதி அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதற்காக ஜவுளிப் பூங்கா உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஆடை ஏற்றுமதியை அதிக அளவு மேற்கொள்ளும் பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு இணையாக இந்தியா துணிகள் ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பு கூடும்.

செமிகண்டக்டர், ஏ.ஐ., கிளவுட் கம்ப்யூட்டிங் போன்ற துறைகளில் 40,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

தரவு மையங்களுக்காக 2047 வரை வரி விலக்கு வழங்குவதால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவுக்கு திரும்பும் வாய்ப்புகள் அதிகரிக்கும். பல முன்னணி நிறுவனங்கள் தரவுத்தள மையங்களை இந்தியாவில் அமைக்க திட்டமிடுவார்கள். இதனால் மின்சாரம், நீர், ரிய ல் எஸ்டேட் ஆகியவற்றின் தேவை அதிகரிக்கும்.

பொதுமக்களுக்கு நேரடி நிதி துாண்டுதல்கள் இல்லாவிட்டாலும், இந்தியாவின் நிலைத்தன்மை, வேலைவாய்ப்பு மற்றும் முக்கிய துறைகளில் முதலீட்டு வாய்ப்புகளை முன்னிறுத்தும் பட்ஜெட்டாக இது இருக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us