ADDED : ஆக 08, 2026 06:34 AM

புதுடில்லி: சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய தொகையை தாமதப்படுத்தும் பிர ச்னைக்கு தீர்வு காண வகை செய்யும் எம்.எஸ்.எம்.இ., மேம்பாட்டு திருத்த மசோதா - 2026, லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதா, ஏற்கனவே கடந்த ஆ கஸ்ட் 3ம் தேதி ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டிருந்தது. அந்த வகையில், பார்லிமென்டின் இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்டு விட்டது. ஜனாதிபதி ஒப்புதல் கிடைத்ததும் இது சட்டமாகும்.
மசோதாவின் முக்கிய அம்சங்கள் குறித்து மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் ஜிதன் ராம் மாஞ்சி ராஜ்யசபாவில் தெரிவித்ததாவது:
எம்.எஸ்.எம்.இ., துறையில் நிலவும் தற்போ தைய சவால்களை சமாளிக்கும் வகையில் மசோதாவில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குறிப்பாக, எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களிடம் கொள்முதல் செய்யும் பொருட்களுக்கு செலுத்த வேண்டிய தொகை தாமதமாவதை தடுக்கும் வகையில், வழக்குகள் மற்றும் தகராறுகளை விரைவாக தீர்ப்பதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்படுகிறது.
எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பணப்புழக்க பிரச்னைக்கு தீர்வு காணவும் மசோதா உதவும்.
மேலும், ஒரு ஆர்டரை ரத்து செய் யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு, 6 மாதங்களுக்கு மேல் நிலுவையில் இருந்தால், சம்பந்தப்பட்ட எம்.எஸ்.எம்.இ., நிறுவனத்திற்கு ஒப்புக்கொ ள்ளப்பட்ட தொகையில் குறைந்தது 50 சதவீதத்தை செலுத்த உத்தரவிடும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கு வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
