ADDED : டிச 14, 2025 01:06 AM

மதுரை: ''இந்தியா, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் பொருளாதாரப் பாலமாக மியான்மர் செயல்படுகிறது'' என மதுரையில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் ஏற்றுமதி ஊக்குவிப்பு மையம் நடத்திய ஏற்றுமதி மாநாட்டில் மியான்மர் கவுரவ துாதர் ரங்கநாதன் தெரிவித்தார்.
அவர் பேசியதாவது:
இந்தியா -- மியான்மர் இடையே ஏற்றுமதி, இறக்குமதிக்கான வாய்ப்புகள் அதிகம். தென்கிழக்கு ஆசியாவின் நுழைவு வாயிலாக மியான்மர் உள்ளது. இந்தியா, மியான்மர், தாய்லாந்து நாடுகள் ஒருங்கிணைந்து நிறைய பொருட்செலவில் மூன்று நாடுகளை இணைக்கும் சாலை உருவாக்கப்பட்டு வருகிறது.
விரைவில் பயன்பாட்டுக்கு வரும் இந்த சாலை வழியாக இந்தியாவிலிருந்து மியான்மர், தாய்லாந்து, லாவோஸ், கம்போடியா நாடுகளுக்கு செல்ல முடியும்.
மியான்மரில் 15 லட்சம் இந்தியர்கள், அதில் 9 லட்சம் தமி ழர்கள் வசிக்கின்றனர். மருந்துகள், இயந்தி ரங்கள், தானியங்கள், ஆடைகள், காஸ்மெட் டிக்ஸ், தேங்காய் நார் ஆகியவை மியான்மருக்கு இந்தியா ஏற்றுமதி செய்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.

