ADDED : நவ 12, 2025 11:07 PM

புதுடில்லி, : பண்டிகை கால செலவுகளுக்காக கடன் வாங்கும் இந்தியர்கள், குறைந்த வட்டியை விட, உடனடி கடன் பெறுவதையே மிக முக்கியமாக கருதுவதாக பைசாபஜார் டிஜிட்டல் தளம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
கடன் பெறுவதில் எளிமை, வெளிப்படைத்தன்மை மற்றும் டிஜிட்டல் அணுகலையே வாடிக்கையாளர்கள் தற்போது விரும்புகின்றனர். பண்டிகை கால செலவுகளுக்கு தனிநபர் கடன் பெறுவதை இந்தியர்கள் பலரும் விருப்ப தேர்வாக கொண்டுள்ளனர்.
விரைவாக கடன் பெற விருப்பம்
42% விரைவாக கடன் வழங்குதல், குறைந்த ஆவணங்களை கேட்ட கடன் வழங்குனர்களை தேர்வு செய்கின்றனர்
80% கடன்களை ஒப்பிட்டுப் பார்க்கவும் விண்ணப்பிக்கவும் டிஜிட்டல் தளங்களையே விரும்புகின்றனர்
53% மேலும் வேகமான ஒப்புதல் மற்றும் விரைவான கடன் விநியோகத்தை எதிர்பார்க்கின்றனர்
கடனுக்கான முக்கிய காரணங்கள் விகிதம்
வீடு புதுப்பித்தல் மற்றும் அலங்கரித்தல் 18%
வீட்டு உபயோக பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ் அண்டு ஷாப்பிங் 15%
தங்கம் மற்றும் நகைகள் 12%
கடன்களை ஒருங்கிணைத்தல் 10%
பேஷன் மற்றும் லைப்ஸ்டைல் ஷாப்பிங் 10%

