ADDED : ஜன 24, 2026 02:41 AM

புதுடில்லி: மிந்த்ரா நிறுவன இணை நிறுவனர் முகேஷ் பன்சால், பிளிப்கார்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைமை தொழில்நுட்ப அதிகாரி பீயுஷ் ரஞ்சன் ஆகியோர் இணைந்து, 'பெர்மி. ஏ.ஐ.,' என்ற கல்வி சார் இணையதளத்தை துவக்கிஉள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:
ஏ.ஐ. தொழில்நுட்ப உதவியால், மாணவர்கள் தங்கள் கேள்விகளுக்கான விடைகளை விரைவாக பெறுகின்றனர். ஆனால், படிநிலைகளை புரிந்து படிப்பது குறைகிறது.
எனவே, உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு 'ஸ்டெம்' எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய பாடங்களின் அடிப்படைகளை, ஏ.ஐ., உதவியுடன் படிப்படியாக புரிந்து படிக்க உதவும் வகையில் புதிய தளம்துவங்கப்பட்டுள்ளது.
கிளவுட் அடிப்படையிலான fermi.ai இணையதளம், பேனா, பேப்பர் துணையுடன் கற்கும் அனுபவத்தை தரும்.
துவக்கத்தில் கணக்கு, இயற்பியல், வேதியியல் பாடங்கள் கற்பிக்கப்படும். இத்தளத்தில், ஓப்பன் ஏ.ஐ., கூகுள் ஆகியவற்றின் ஏ.ஐ., தயாரிப்புகள் பயன்படுத்தப்படும்.
புதிய நிறுவனம், 'மெராகி லேப்ஸ்' நிறுவனத்தின் முதலீட்டில் சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்டு துவங்கப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

