sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 25, 2026 ,பங்குனி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

 எத்தனால் பெட்ரோல் விற்பனை ஏப்., 1 முதல் புதிய கட்டுப்பாடு

/

 எத்தனால் பெட்ரோல் விற்பனை ஏப்., 1 முதல் புதிய கட்டுப்பாடு

 எத்தனால் பெட்ரோல் விற்பனை ஏப்., 1 முதல் புதிய கட்டுப்பாடு

 எத்தனால் பெட்ரோல் விற்பனை ஏப்., 1 முதல் புதிய கட்டுப்பாடு


ADDED : பிப் 26, 2026 02:07 AM

Google News

ADDED : பிப் 26, 2026 02:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: வரும் ஏப்ரல் மாதம் முதல், நாடு முழுதும் 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ராலை, குறைந்தபட்ச 95 சதவீத ஆக்டேனை கொண்டிருக்கும், ஆர்.ஓ.என்., 95 தரத்துடன் விற்பனை செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பெட்ரோலியம் அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், 'வரும் ஏப்., 1 முதல், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் எண்ணெய் நிறுவனங்கள் இந்திய தரநிலை அமைப்பின் விதிமுறைகளின்படி 20 சதவீதம் வரை எத்தனால் கலந்த பெட்ரோலை கட்டாயம் விற்க வேண்டும்.

இதில், குறைந்தபட்ச ஆர்.ஓ.என்., தரம் கட்டாயமாக 95ஆக இருக்க வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருந்தாலும், இ20 எனப்படும், 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்படுத்துவதற்கு, 2023 - 25 முதல் தயாரிக்கப்படும் வாகனங்களே பெரும்பாலும் ஏற்றவை. பழைய வாகனங்களில் மைலேஜ் குறையலாம். ரப்பர், பிளாஸ்டிக் பாகங்கள் சேதமடையலாம்.

எனவே, இன்ஜின் சேதத்தை தடுப்பதற்காகவே இ20 பெட்ரோலில் ஆர்.ஓ.என்., 95 தரம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us