ADDED : ஏப் 18, 2025 10:51 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:கோவையைச்சேர்ந்த 'ஐயாம்நியோ' நிறுவனத்தின் 70 சதவீத பங்குகளை, திறன் மேம்பாட்டு நிறுவனமான என்.ஐ.ஐ.டி., 61.30 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. ஐயாம்நியோ நிறுவனம், செயற்கை நுண்ணறிவின் உதவியோடு, கல்லுாரி மாணவர்கள் மற்றும் ஆரம்ப கட்ட தொழில் வல்லுனர்களுக்கு, ஆழ்திறன் மென்பொருள் சேவையை வழங்கி வருகிறது.
கையகப்படுத்தலுக்கு பிறகும், இதன் நிறுவனர்கள் அவர்களது பொறுப்பில் தொடர்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் ஐயாம்நியோ நிறுவனத்தின் மீதமுள்ள 30 சதவீத பங்குகளையும் வாங்க உள்ளதாக, என்.ஐ.ஐ.டி., தெரிவித்துள்ளது.

