ADDED : மே 25, 2025 11:30 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:உ.பி.,யை சேர்ந்த காகித பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான நிகிதா பேப்பர்ஸ், புதிய பங்கு வெளியீடு வாயிலாக 67.50 கோடி ரூபாயை திரட்ட உள்ளது.
முற்றிலும் புதிய பங்கு விற்பனை முறையில், 64.94 லட்சம் பங்குகளை விற்பனை செய்ய திட்டமிட்டு உள்ள இந்நிறுவனம், பங்கு ஒன்றின் விலை 95--104 ரூபாயாக நிர்ணயம் செய்து உள்ளது. ஐ.பி.ஓ., வாயிலாக திரட்டப்படும் தொகையில், மூலதன செலவினங்கள், நடப்பு மூலதனம் ஆகியவற்றுக்கு செலவிட உள்ளது.
சில்லரை முதலீட்டாளர்கள் வரும் 27 முதல் 29ம் தேதி வரை, குறைந்தபட்சம் 1,200 பங்குகள் கேட்டு விண்ணப்பிக்கலாம். நிகிதா பேப்பர்ஸ் பங்குகள், தேசிய பங்குச்சந்தையின் எஸ்.எம்.இ பிரிவில் பட்டியலிடப்பட உள்ளன.