என்.எல்.சி., 9 மாத வருவாய் ரூ.12,447 கோடி ஈட்டி சாதனை
என்.எல்.சி., 9 மாத வருவாய் ரூ.12,447 கோடி ஈட்டி சாதனை
ADDED : பிப் 12, 2026 01:37 AM

நெய்வேலி: என்.எல்.சி., இந்தியா, நடப்பு நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் எப்போதும் இல்லாத அளவில், மொத்த வருவாயாக 12,447 கோடி ரூபாய் ஈட்டி புதிய சாதனை படைத்து உள்ளது.
இதுகுறித்து நிறுவன தலைவர் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி மேலும்கூறியதாவது:
என்.எல்.சி., இந்தியா நிறுவனம், நடப்பு நிதியாண்டின் (2025-26) முதல் ஒன்பது மாத காலத்துக்கான நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது.
அதில், மொத்த வருவாய், கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் பெறப்பட்ட 7,563 கோடி ரூபாயுடன் ஒப்பிடுகையில், நடப்பு நிதியாண்டில் 7,946 கோடியாக உயர்ந்துள்ளது.
என்.எல்.சி., நிறுவனத்தின் வரிக்கு பிந்தைய லாபம் நடப்பு நிதியாண்டில் 1,282 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் (2025-26) முதல் ஒன்பது மாதங்களில், ஒட்டுமொத்தமாக 2,054 கோடி யூனிட் மின் உற்பத்தியை எட்டி சாதனை படைத்துள்ளது. இதில் 160 கோடி யூனிட் மின்சாரம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மின்சாரம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

