உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜன 25, 2026 01:34 AM

அ நிறம் | அளவு
நோக்கியா நிறுவனம், சர்வதேச திறன் மையம் மற்றும் கூடுதல் ஆய்வு மையங்களை கர்நாடகாவில் அமைக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக அம்மாநில தொழில் துறை அமைச்சர் பாட்டீல் கூறியுள்ளார்.
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில், உலக பொருளாதார மன்ற நிகழ்ச்சியில் கர்நாடக அரசும் நோக்கியா நிறுவன அதிகாரிகளும் பேச்சு நடத்தினர். அப்போது, பெங்களூருவை தாண்டி இரண்டாம் நிலை நகரங்களிலும் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்த நோக்கியா விருப்பம் தெரிவித்தது.
கடந்த 25 ஆண்டுகளாக கர்நாடகாவில் இயங்கி வரும் நோக்கியா, அங்கு உலகின் மிகப்பெரிய ஆய்வு மையத்தை நடத்தி வருகிறது. அதற்கு அனைத்து உதவிகளையும் மாநில அரசு செய்யும் என்று பாட்டீல் தெரிவித்துள்ளார்.
