sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/பொது/ எண்கள்: காற்றாலை மின்சார உற்பத்தி

 எண்கள்: காற்றாலை மின்சார உற்பத்தி

 எண்கள்: காற்றாலை மின்சார உற்பத்தி


UPDATED : மார் 25, 2026 01:49 AM

ADDED : மார் 25, 2026 01:47 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 25, 2026 01:49 AM ADDED : மார் 25, 2026 01:47 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

100

சுஸ்லான் நிறுவனம், கெயில் நிறுவனத்திடமிருந்து 100 மெகாவாட் காற்றாலை மின்சார உற்பத்தி ஆர்டரை பெற்றுள்ளது. இது, நடப்பு நிதியாண்டில் சுஸ்லான் பெற்ற 4வது பொதுத் துறை ஒப்பந்தம். அதேபோல, கெயில் நிறுவனத்திடமிருந்து சுஸ்லான் பெறும் 6வது காற்றாலை மின் திட்டம் ஆகும். புதிய ஆலை வாயிலாக பெறப்படும் மின்சாரம், கெயிலின் நந்தர்பார் நகர தொழிற்சாலையின் கார்பன் உமிழ்வை குறைக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Image 1553496


55,837

பணப்புழக்கத்தை அதிகரிக்கும் நோக்கில் 55,837 கோடி ரூபாயை வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது. மூன்று நாள் ரெப்போ விகித அடிப்படையிலான ஏலத்தின் வாயிலாக இத்தொகை வழங்கப்பட்டுள்ளது. சராசரியாக 5.26 சதவீத வட்டியில் இத்தொகை விடுவிக்கப் பட்டு உள்ளது. ஏற்கனவே, அண்மையில் ஒரு நிதி தொகுப்பை ஆர்.பி.ஐ., வெளியிட்டது. இது நிதியாண்டின் இறுதி என்பதால், முன்கூட்டியே பிடிக்கப்பட்ட வரி, வங்கிகளிடமிருந்து அரசுக்கு சென்றுவிடும் என்ற நிலையில், வங்கிகளின் பணப்புழக்கத்தை சீராக்க இந்த தொகை உதவும்.

Image 1553497


1,40,00,000

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் இரும்புத்தாது இறக்குமதி, 1.20 கோடி டன் முதல் அதிகபட்சமாக 1.40 கோடி டன் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது இரண்டு மடங்கைவிட அதிகம். மேலும், கடந்த 7 ஆண்டுகளில் உச்சபட்ச இறக்குமதியும் இதுவே. ஜே.எஸ்.டபிள்யூ., நிறுவனம் தனது மஹாராஷ்டிரா, கர்நாடகா ஆலைகளுக்கு அதிக அளவில் இறக்குமதி செய்தது. நடப்பாண்டில் பிரேசில், ஓமன் நாடுகளிலிருந்தே அதிக அளவு இரும்புத்தாதுவை இந்தியா இறக்குமதி செய் துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us