
1,000
ஆ ந்திராவின் ஸ்ரீசிட்டியில், 1,000 கோடி ரூபாய் முதலீட்டில், 'பிஜி எலக்ட்ரோபிளாஸ்ட்' நிறுவனத்தின் துணை நிறுவனமான 'பிஜி டெக்னோபிளாஸ்ட்' பிரிஜ் தயாரிப்பு ஆலை அமைக்க உள்ளது. இதற்காக, இந்நிறுவனம் 50 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி உள்ளது.
ஆண்டுக்கு 12 லட்சம் பிரிஜ் தயாரிப்பு திறன் கொண்ட இந்த ஆலை வாயி லாக 500 பேருக்கு வேலை கிடைக்கும். மேலும், வரும் 2026 டிசம்பரில் வர்த்தக பயன்பாட்டுக்கான 'ஏசி, வாஷிங்மெஷின் மற்றும் பிற வீட்டு உபயோக சாதனங்கள் தயாரிப்பை துவங்க இந்நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.
2,00,000
பொ ருட்களின் விலை தொடர்பாக நுகர்வோரை தவறாக வழி நடத்தியதற்காக, ஆன்லைன் வர்த்தக தளமான பர்ஸ்ட்கிரை.காமை இயக்கும் 'டிஜிட்டல் ஏஜ் ரீடெய்ல்' நிறுவனத்துக்கு, மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
அதிகபட்ச விலையில் அனைத்து வரிகளும் உட்பட என குறிப்பிட்டு விட்டு, தள்ளுபடி விலைக்கு கூடுதல் ஜி.எஸ்.டி., விதித்ததாக வாடிக்கையாளர் ஒருவர் புகார் அளித்திருந்தார்.
தேசிய நுகர்வோர் உதவி மையம் நடத்திய விசாரணையில், குறிப்பிட்ட பொருளுக்கு 27 சதவீதம் தள்ளுபடி என அறிவித்து விட்டு, ஜி.எஸ்.டி., என சேர்த்து 18.20 சதவீதம் மட்டுமே தள்ளுபடி அளித்தது தெரிய வந்தது.