
40
 மின்சார வாகனங்களுக்கான, மோட்டார், ஆக்சிஸ் உள்ளிட்ட உபகரணங்களை உற்பத்தி செய்யும் உள்நாட்டு நிறுவனமான சுயோ மேனுபேக்சரிங், அவானா கேபிட்டல் என்ற நிறுவனத்திடம் இருந்து 40 கோடி ரூபாய் முதலீடு பெற்றுள்ளது.
மின்சார மூன்று சக்கர வாகனங்கள் துவங்கி டிராக்டர்கள், வர்த்தக வாகனங்கள் வரை, உதிரிபாகங்கள் மற்றும் உபகரணங்களை உற்பத்தி செய்கிறது. மஹிந்திரா, வால்வோ ஐச்சர், சோனாலிக்கா உள்ளிட்ட நிறுவனங்களுக்கு இந்நிறுவனம் வினியோகம் செய்து வருகிறது.
அரிய வகை காந்தங்கள் இல்லாத மற்றும் ஹைபிரிட் காந்தங்கள் கொண்ட மோட்டார் தொழில்நுட்பத்தில், இந்நிறுவனம் 29க்கும் அதிகமான காப்புரிமைகளை வைத்து உள்ளது.
93%
பொ துத்துறை தொலைதொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல்., கடந்த செப்டம்பர் காலாண்டில், 93 சதவீத வருவாய் இலக்கை எட்டி இருப்பதாக மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். 5,740 கோடி ரூபாய் வருவாய் இலக்கு நிர்ணயித்த நிலையில், 5,347 கோடி ரூபாய் வருவாயை ஈட்டி உள்ளதாகவும்,  நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டு காலத்தில், 11,134 கோடி ரூபாய் வருவாயை ஈட்டி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
5,00,000
உ லகின் முதல் 5 லட்சம் கோடி டாலர் சந்தை மதிப்பு கொண்ட நிறுவனமான என்விடியா சாதனை படைத்து உள்ளது.
ஏ.ஐ., சிப் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள இந்நிறுவனம், வலுவான விற்பனை, நோக்கியா நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்திருப்பது  மற்றும் சீன சந்தையை அணுகுவதற்கான வாய்ப்பு ஆகியவை காரணமாக நேற்று முன்தினம் அமெரிக்க பங்குச்சந்தையில் என்விடியா நிறுவன பங்குகள் 5 சதவீதம் உயர்வு கண்டதால், சந்தை மதிப்பு உச்சம் தொட்டது.

