sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

 எண்கள்

/

 எண்கள்

 எண்கள்

 எண்கள்


ADDED : நவ 26, 2025 01:37 AM

Google News

ADDED : நவ 26, 2025 01:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

3,000

கனடா ஓய்வூதிய திட்ட முதலீட்டு வாரியம் மற்றும் இண்டோஸ்பேஸ் நிறுவனத்தின் கூட்டு நிறுவனமான இண்டோஸ்பேஸ் கோர், 3,000 கோடி ரூபாய் முதலீட்டில், ஆறு தொழில் மற்றும் தளவாட பூங்காக்களை கையகப்படுத்தி உள்ளது. பெங்களூரு, சென்னை, டில்லி, மும்பை, புனே உள்ளிட்ட முக்கிய தளவாட சந்தையில் அமைந்துள்ள இந்த பூங்காக்கள், மொத்தம் 380 ஏக்கர் பரப்பளவை கொண்டுள்ளன. இதில், 90 லட்சம் சதுரடி பரப்பளவு குத்தகைக்கு விடப்பட உள்ளன.

100

ஜம்மு காஷ்மீரில் 100 கோடி டன் அளவுக்கு சுண்ணாம்புக்கல் இருப்பு இருக்கும் என இந்திய புவியியல் ஆய்வு மையம் மதிப்பிட்டு உள்ளது. மேலும் ஜம்மு காஷ்மீரில் பிற முக்கிய கனிமங்கள் இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாவும், இதனை மாநில அரசு கண்டறிந்து, மக்களின் நலனுக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் ஜம்மு காஷ்மீரில் முதல்முறையாக சுண்ணாம்புக்கல் சுரங்கத்துக்கு ஏலம் துவங்கப்பட்டு உள்ளது.

8

நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், சந்தையில் பட்டியலிடப்பட்ட தனியார் நிறுவனங்களின் விற்பனை வளர்ச்சி 8 சதவீதமாக அதிகரித்து இருப்பதாக ஆர்.பி.ஐ., தரவுகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அனைத்து முக்கிய துறைகளில் முன்னேற்றம் கண்டதால், முந்தைய காலாண்டில் பதிவான 5.50 சதவீதத்தை பின்னுக்கு தள்ளி உள்ளது. அதே சமயம், கடந்த 2024--25ம் நிதியாண்டில், ஜூலை - செப்டம்பர் காலத்தில் விற்பனை வளர்ச்சி 5.40 சதவீதமாக பதிவாகி இருந்தது.






      Dinamalar
      Follow us