
12,340
நா ட்டின் மின் நுகர்வு, கடந்த நவம்பரில் 0.31 சதவீதம் குறைந்து, 12,340 கோடி யூனிட்களாக பதிவாகி உள்ளது. முந்தைய ஆண்டு நவம்பரில் 12,379 கோடி யூனிட்களாக மின்சார நுகர்வு பதிவாகி இருந்தது.
கடந்த அக்டோபரில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக குளிர்சாதனப் பொருட்கள் பயன்பாடு குறைந்தது, நவம்பரில் வடகிழக்கு பருவமழை துவங்கியதும், மின் நுகர்வு குறைய காரணங்களாகும்.
கடந்த 2024, மே மாதத்தில் நாட்டின் மின் தேவை, இதுவரை இல்லாத அளவு, அதிகபட்சமாக 250 ஜிகாவாட்டாக பதிவாகி இருந்தது.
266
டா ல்மியா சிமென்ட் நிறுவனத்துக்கு அனுப்பிய 266.30 கோடி ரூபாய், அபராதத்துடன் கூடிய வரி ஏய்ப்பு நோட்டீஸை தமிழக வரித்துறை அதிகாரிகள் திரும்ப பெற்று உள்ளனர்.
விற்பனை மற்றும் உள்ளீட்டு வரி வரவு வித்தியாசம் இருப்பதாக, கடந்த 2019--20ம் மதிப்பீட்டு ஆண்டில், 128.39 கோடி ரூபாய் வரியுடன், 19.25 கோடி ரூபாய் அபராதம் மற்றும் கடந்த 2022--23ம் மதிப்பீட்டு ஆண்டில்,59.32 கோடி ரூபாய் வரியுடன், 59.32 கோடி ரூபாய் அபராதம் விதித்து, டால்மியா சிமென்ட் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது.

