
80,000
கடந்த 3 ஆண்டுகளில், 80,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் வாயிலாக, 33 நிறுவனங்களை அதானி குழுமம் கையகப்படுத்தி உள்ளது. 2023 ஜனவரியில் ஹிண்டன்பெர்க் நிறுவனத்தின் குற்றச்சாட்டால், அதானி குழும பங்குகள் விலை சரிவை கண்டன.
எனினும், அதன் பின், துறைமுக துறையில் 28,145 கோடி ரூபாய், சிமென்ட் துறையில் 24,710 கோடி ரூபாய், மின்சார துறையில் 12,251 கோடி ரூபாய், வளர்ந்து வரும் நிறுவனங்களில் 3,927 கோடி ரூபாய் மற்றும் மின் பகிர்மான துறையில் 2,544 கோடி ரூபாய் என, கையகப்படுத்தல் ஒப்பந்தங்களை அதானி குழுமம் மேற்கொண்டது.
10,900
பிரதமரின் இ-டிரைவ் திட்டத்தின் கீழ், 12 மாநிலங்களில் இயக்கப்படுவதற்கு 10,900 மின்சார பஸ்கள் வாங்குவதற்கான டெண்டரை முடித்துள்ளதாக, பொதுத்துறையை சேர்ந்த கன்வெர்ஜென்ஸ் எனர்ஜி சர்வீசஸ் எனப்படும் சி.இ.எஸ்.எல்., நிறுவனம் தெரிவித்துள்ளது.
மின்சார பஸ்களுக்கான டெண்டரில் பங்கேற்ற 16 நிறுவனங்களில், தொழில்நுட்ப ரீதியாக தகுதியுடைய 14 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

