உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூன் 21, 2026 02:59 AM

அ நிறம் | அளவு
புவனேஸ்வர்: ஒடிஷாவில் இருந்து முட்டை பொடி முதல்முறையாக ஆஸ்திரியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஒடிஷா மாநிலம், பலாங்கீர் நகரில் உள்ள முட்டை பதப்படுத்தும் ஆலையில் தயாரிக்கப்பட்ட 22.6 டன் உலர்த்தப்பட்ட முழு முட்டை பொடி 'அபெடா' வாயிலாக ஆஸ்திரியாவுக்கு முதல் முறையாக அனுப்பப்பட்டுள்ளது.
இந்த பொடி, உணவு பதப்படுத்தல், பேக்கரி உள்ளிட்ட துறைகளில் பயன்படுத்தப்படுகிறது. ஒடிஷாவில் இத்துறையில் புதிய முதலீடுகளை ஈர்க்க இந்த ஏற்றுமதி உதவும்.
