இந்தியாவில் டேப்லெட் தயாரிப்பு; 'ஒன்பிளஸ்' நிறுவனம் துவக்கியது
இந்தியாவில் டேப்லெட் தயாரிப்பு; 'ஒன்பிளஸ்' நிறுவனம் துவக்கியது
UPDATED : ஆக 13, 2025 10:36 AM
ADDED : ஆக 13, 2025 02:13 AM

புதுடில்லி: சீனாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான 'ஒன்பிளஸ்' நிறுவனம், நம்நாட்டின் மின்னணு பொருட்கள் தயாரிப்பாளரான 'பகவதி புராடக்ட்ஸ்' நிறுவனத்துடன் இணைந்து, உள்நாட்டில் பிரீமியம் டேப்லெட்களை தயாரிக்க இருப்பதாக அறிவித்து உள்ளது.
இது குறித்து ஒன்பிளஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் 'ஒன் பிளஸ் 3' மற்றும் 'ஒன்பிளஸ் பேடு லைட்' தயாரிப்புகளை மேற்கொள்ள, பகவதி புராடக்ட்ஸ் நிறுவனத்துடன் கைகோர்த்து உள்ளோம்.
உள்நாட்டில் ஸ்மார்ட்போன் தயாரிப்போடு, கூடுதலாக டேப்லெட் தயாரிப்புகளையும், இந்நிறுவனத்துக்கு சொந்தமான கிரேட்டர் நொய்டா ஆலையில் துவங்கி உள்ளோம்.
இந்திய சந்தைக்கு ஏற்ற வகையில், டேப்லெட் வடிவமைப்பை மேற்கொள்ள, பகவதி புராடக்ட்ஸ் நிறுவனம் முழுமையாக ஆதரவு அளிக்கும். உள்நாட்டில் டேப்லெட் தயாரிப்பை துவங்கியதன் வாயிலாக, இந்தியாவுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.