ADDED : ஜூன் 07, 2025 12:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தொழிற்சாலைகளுக்கு மின் இணைப்பை விரைந்து வழங்குமாறு, மண்டல தலைமை பொறியாளர்களுக்கு, மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
பெரிய தொழில் நிறுவனங்களுக்கு தடையின்றி, சீராக மின் வினியோகம் செய்வது தொடர்பாக, மின்வாரியம் மற்றும் தொழில் துறை உயரதிகாரிகள், நேற்று ஆலோசனை நடத்தினர்.
இதில், மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன், தொழில்துறை செயலர் அருண்ராய், 'சிப்காட்' மேலாண் இயக்குநர் செந்தில்ராஜ், மின்வாரிய இயக்குநர்கள் பங்கேற்றனர். இதன் தொடர்ச்சியாக தொழிற்சாலைகளுக்கு மின் இணைப்பை விரைந்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.