தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ ஒசைரி நுால் விலை 5 ரூபாய் குறைந்தது

 ஒசைரி நுால் விலை 5 ரூபாய் குறைந்தது

 ஒசைரி நுால் விலை 5 ரூபாய் குறைந்தது


ADDED : செப் 16, 2026 04:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 16, 2026 04:48 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்: வரத்து அதிகரித்து, பஞ்சு விலை குறைய வாய்ப்பு ள்ளதால், ஒசைரி நுால் விலை கிலோவுக்கு, 5 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாக, நுாற்பாலைகள் அறிவித்துள்ளன.

பருத்தி ஆ ண்டு (2025 அக்., - 2026 செப்.,) நிறைவடைய, 15 நாள் மட்டுமே உள்ள நிலையில், இருப்பு வைத்திருந்த பஞ்சு விற்பனைக்கு வருவது சற்று அதி கரித்துள்ளது. சில மாநிலங்களில் முன்கூட்டியே அறுவடை நடந்ததால், புதிய பஞ்சு வரத்தும் துவங்கி விட்டது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன், தினசரி பஞ்சு வரத்து, 2,200 'பேல்'களாக (ஒரு பேல் 170 கிலோ) குறைந்திருந்தது; நேற்றைய நிலவரப்படி, 10 ஆயிரம் 'பேல்'களை தொட்டுவிட்டது.

மார்க்கெட்டில் வரத்து துவங்கியதால், பஞ்சு விலை சற்று குறைந்துள்ளது. புதிய பஞ்சு வரத்து துவங்கும் போது, மேலும் விலை குறைய வாய்ப்புள்ளது. கடந்த 1ம் தேதி, பஞ்சு விலை உயர்வால், பின்னலாடை உற்பத்திக்கு பயன்படுத்தும், ஒசைரி நுால் விலை, கிலோவுக்கு ஐந்து ரூபாய் உயர்ந்தது.

பஞ்சு வி லை குறைய துவங்கியுள்ளதால், நுால் விலை, கிலோவுக்கு 5 ரூபாய் குறைக்கப்படுவதாக, நுா ற்பாலைகள் அறிவித்துள்ளன.

அடுத்தடுத்த விலை உயர்வு க்கு பிறகு, நுால் விலை குறைக்கப் பட்டதால், உற்பத்தியாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

லுங்கி மீட்டருக்கு ரூ.3 உயர்கிறது

நுால் விலை உயர்வால் நஷ்டத்தை சமாளி க்க, கைலி மீட்டருக்கு, 3 ரூபாய் விலை உயர்த்த, பள்ளிப்பாளையம் லுங்கி உற்பத்தியாளர்கள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையத்தில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் செயல்படுகின்றன. பெரும்பாலான விசைத்தறி கூடங்களில், கைலி (லுங்கி) உற்பத்தியே அதிகம் நடக்கிறது. கடந்த சில மாதங்களாக நுால் விலை உயர்வால், லுங்கி உற்பத்தியாளர்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

இதனால், லுங்கி மீட்டருக்கு, 3 ரூபாய் விலை உயர்த்தி விற்பனை செய்வது என, நேற்று நடந்த சங்கத்தின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இது, இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us