தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ ஏற்றுமதி சான்றிதழ் பெற காகித சலான் தேவையில்லை: டி.ஜி.எப்.டி., உத்தரவு

 ஏற்றுமதி சான்றிதழ் பெற காகித சலான் தேவையில்லை: டி.ஜி.எப்.டி., உத்தரவு

 ஏற்றுமதி சான்றிதழ் பெற காகித சலான் தேவையில்லை: டி.ஜி.எப்.டி., உத்தரவு


ADDED : ஆக 11, 2026 01:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 11, 2026 01:49 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: ஏற்றுமதியை நிறைவு செய்ததற்கான சான்றிதழ் பெற விண்ணப்பிக்கும்போது, சுங்க வரி செலுத்தியதற்கான காகித சலான்களை சமர்ப்பிக்க வேண்டிய அவசியத்தை டி.ஜி.எப்.டி. எனப்படும் வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குநரகம் நீக்கியுள்ளது.

இதுகுறித்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

முன்கூட்டிய அங்கீகாரம் மற்றும் மூலதன பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு திட்டங்களின் கீழ், ஏற்றுமதியாளர்கள் தாமாக முன்வந்து செலுத்தும் சுங்க வரிக்கு இந்த புதிய நடைமுறை பொருந்தும். கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் செலுத்தப்பட்ட தொகைகளுக்கு இது பொருந்தும். இதன்படி, ஏற்றுமதியை நிறைவு செய்ததற்கான சான்றிதழுக்கு விண்ணப்பிக்கும்போது, சுங்க வரி செலுத்தியதற்கான காகித சலானை இனி சமர்ப்பிக்க வேண்டியதில்லை.

சுங்கத் துறையின் ஐஸ்கேட் இணையதளத்தில் பதிவாகும் வரி செலுத்திய விவரங்கள், டி.ஜி.எப்.டி., இணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. எனவே, ஏற்றுமதியாளர்கள் தாங்கள் செலுத்திய வரி விவரங்களை ஆன்லைனில் பார்த்து சரிபார்த்துக்கொள்ளலாம். அதன் பிறகு சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம்.

மேலும், இந்த விவரங்களை டி.ஜி.எப்.டி.,யின் பிராந்திய அலுவலகங்களும் ஆன்லைனில் சரிபார்க்க முடியும். இதனால், காகித ஆவணங்களை தனியாக சரிபார்க்க வேண்டிய அவசியம் இருக்காது. இந்த புதிய நடைமுறையால் ஏற்றுமதியாளர்களின் ஆவண பணிகள் குறைவதுடன், விண்ணப்பங்களை பரிசீலிக்கும் நேரமும் குறையும். தகவல்கள் துல்லியமாக இருப்பதுடன், மனித தலையீடும் குறையும்.

டி.ஜி.எப்.டி., மற்றும் ஐஸ்கேட் இணையதளங்களுக்கு இடையிலான தகவல் பரிமாற்ற வசதி வாயிலாக இந்த நடைமுறை செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக ஏற்றுமதியாளர்களின் நடைமுறை சுமையும், பரிவர்த்தனை செலவும் குறையும். இவ்வாறு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us