வாசனை திரவிய நிறுவனங்கள் கடன் வழங்குமாறு கோரிக்கை
வாசனை திரவிய நிறுவனங்கள் கடன் வழங்குமாறு கோரிக்கை
ADDED : ஜூன் 10, 2026 01:50 AM

சென்னை:ஏற்றுமதி பாதிப்பால் தேக்கம் அடைந்துள்ள, பூக்களிலிருந்து தயாரிக்கப்படும் வாசனை திரவிய இருப்பின் மீது கடன் வழங்க வேண்டும் என வாசனை திரவியம் தயாரிக்கும் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
இது குறித்து வர்த்தகர்கள் கூறியதாவது:
தமிழகத்தில் 40க்கும் மேற்பட்ட வாசனை திரவிய மெழுகு தயாரிக்கும் பேக்டரிகள் உள்ளன. ஆண்டுக்கு கிட்டத்தட்ட 80 லட்சம் கிலோ மல்லி, சம்பங்கி, ஜாதிமல்லி ஆகிய நறுமண பூக்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன.
கிட்டத்தட்ட 12,500 கிலோ வாசனை திரவிய மெழுகு தயாரிக்கப்படுகிறது. இந்த மெழுகை வாங்கி அதிலிருந்து எண்ணெய் பிரித்தெடுத்து சென்ட் தயாரிக்கப்படுகிறது. பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்ட் தயாரிக்க தமிழகத்திலிருந்து இந்த மெழுகு அனுப்பப்படுகிறது.
மேற்காசிய போரால் வாசனை திரவிய மெழுகு ஏற்றுமதி 50 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது. தேக்கம் அடைந்துள்ள வாசனை திரவிய மெழுகுக்கு வட்டியில்லா கடன் வழங்கினால் பூக்கள் கொள்முதல் அதிகரிக்கும்; கூடுதல் விலையும் கிடைக்கும்.
இவ்வாறு கூறினர்.
