உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : மே 07, 2026 11:56 PM

அ நிறம் | அளவு
புதுடில்லி: பேக்கிங் பைகளின் விலை 70 சதவீதம் வரை உயர்ந்ததால், புதிய சவாலை எதிர்கொண்டுள்ளதாக 'அல்ட்ராடெக் சிமென்ட்' நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆதித்யா பிர்லா குழுமத்தை சேர்ந்த 'அல்ட்ராடெக் சிமென்ட்' நிறுவனம், 2026 -- 27ம் நிதியாண்டில் இரட்டை இலக்க வளர்ச்சியை இலக்காக கொண்டுள்ளது. இந்த நிலையில், சிமென்ட் நிரப்ப பயன் படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளின் விலை உயர்வு மற்றும் போக்குவரத்து செலவுகள் அந்நிறுவனத்திற்கு புதிய சவால்களாக உருவெடுத்துள்ளன.
மேற்காசிய போரால் நீடித்து வரும் பதற்றம் காரணமாக, பிளாஸ்டிக் விலை 70 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதனால், மார்ச் காலாண்டில் இந்நிறுவனத்தின் பிளாஸ்டிக் பைகளுக்கான செலவு 90 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.
