ரூ.3,400 கோடி மின் திட்டங்கள் பவர்கிரிட் கைப்பற்றியது
ரூ.3,400 கோடி மின் திட்டங்கள் பவர்கிரிட் கைப்பற்றியது
ADDED : அக் 24, 2025 03:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:பொதுத்துறையைச் சேர்ந்த பவர்கிரிட் நிறுவனம், 3,375 கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டு மின்சாரப் பகிர்மான திட்டங்களைக் கைப்பற்றியுள்ளது.
விந்தியாச்சல் வாரணாசி டிரான்ஸ்மிஷன் மற்றும் எஸ்.ஆர்.டபுள்யூ.ஆர்., பவர் டிரான்ஸ்மிஷன் ஆகிய இரண்டு திட்டங்களை போட்டி ஏலம் வாயிலாக வென்றுள்ளது.
இத்திட்டங்கள் நாட்டின் மின்சார பகிர்மான கட்டமைப்பை வலுப்படுத்தும் என்றும், அதிக சுமையுடன் இயங்கும் மின் பகிர்மான வழித்தடங்களில் உள்ள நெரிசலை குறைக்கும் என்றும் பவர்கிரிட் தெரிவித்துள்ளது.
உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கிடையே புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை தடையில்லாமல் எடுத்துச்செல்ல இத்திட்டங்கள் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

