ADDED : ஜன 23, 2026 01:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி, ஜன. 23--
இந்தியாவில் மின்சார கார்களை மட்டுமே எதிர்காலமாக கருதுவதை விட, பசுமை எரிவாயுவில் இயங்கும் இன்ஜின் கொண்ட கார்கள், நடைமுறைக்கு பொருத்தமாக இருக்கும் என, டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனத்தின் இந்திய தலைவர் விக்ரம் குலாட்டி தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், '' இந்தியா, பசுமை போக்குவரத்தை நோக்கி பயணிக்கிறது. ஆனால், மின்சார கார்கள் மட்டுமே இதற்கு தீர்வு ஆகாது. எத்தனால் கலப்பு பெட்ரோல், சி.என்.ஜி., ஹைட்ரஜன் உள்ளிட்டவை முக்கிய பசுமை எரிவாயுக்கள். சாதாரண இன்ஜினை பசுமை எரிவாயுவில் இயங்கும் இன்ஜினாக மாற்றுவது இந்தியாவுக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு'' என்றார்.

