UPDATED : நவ 24, 2026 12:00 AM
ADDED : நவ 23, 2026 10:34 PM

புதுடில்லி: நாட்டின் தனியார் துறை நிறுவனங்களின் செயல் பாடுகள் நவம்பரில் 5 மாத உச்சத்தை எட்டியுள்ளதாக, ஹெச்.எஸ்.பி.சி., வங்கியின் ‘பிளாஷ் இந்தியா கூட்டு பி.எம்.ஐ.,’ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அறிக்கையின் விபரம்:
தயாரிப்பு, சேவைகள் துறை வளர்ச்சியை குறிக்கும் கூட்டு பி.எம்.ஐ., குறியீடு நவம்பரில் 56.30 புள்ளிகளாக சற்றே உயர்ந்துள்ளது. இது, அக்டோபரில் 56.20 ஆக இருந்தது. 50 புள்ளிகளுக்கு மேல் உள்ளதால் தொடர்ந்து 64 மாதங்களாக வளர்ச்சி நீடிக்கிறது.
இம்மாதம் சேவைத்துறையை விட தயாரிப்பு துறை சிறப்பாக செயல்பட்டுள்ளது. தயாரிப்பு துறை பி.எம்.ஐ., 54.70ல் இருந்து 56 ஆக உயர்ந்த நிலையில், சேவைத்துறை 55.80ல் இருந்து 55.30 புள்ளிகளாக குறைந்துள்ளது.
தேவை அதிகரிப்பு, புதிய வாடிக்கையாளர்களால் விற்பனை உயர்ந்துள்ளது. ஏற்றுமதி ஆர்டர்கள் 4 மாதங்களில் இல்லாத வேகத்தில் அதிகரித்துள்ளன. இரு துறைகளிலும் செலவுகள் சிறிதளவே உயர்ந்தாலும், விற்பனை விலை வேகமாக அதிகரித்து உள்ளது.
தயாரிப்பு துறையில் வேலைவாய்ப்பு 7 மாதங்களில் இல்லாத வேகத்தில் உயர்ந்துள்ளது. சேவைத்துறை நிறுவனங்கள் கிட்டத்தட்ட ஓராண்டுக்கு பின் ஊழியர்களை குறைத்துள்ளன.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
